திருவாரூர்,

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்றைய போராட்டத்தில் திமுக உள்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல், ரெயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது திருவாரூரில் முகாமிட்டுள்ள திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின். டி.ஆர்.பாலு ஆகியோர்  இன்று காலை திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

திருவாரூர் மாவட்ட பஸ் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்களை  போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திருச்சி பஸ் நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை போலீசார் கைது செய்தனர்.