இந்தியா முழுதும் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக பரலவன எதிர்ப்பு காணப்டுகிறது.
மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி, இந்த வரியை நீக்க வலியுறுத்தி வருகிறார்கள். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் ஜிஎஸ்டி-க்கு எதிராக ஜவுளி வியாபாரிகள் பிரம்மாண்ட பேரணி நடத்தி, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த மாபெரும் பேரணியின் வீடியோ காட்சி, தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது குஜராத் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சூரத் நகரம், ஜவுளிகள் மற்றும் வைர வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறது. குஜராத்தின் பொருளாதாரத் தலைநகர் என்று கூறப்படும் இந்த சூரத் நகரில் ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக பிரம்மாண்ட பேரணியை நடத்தினர் வியாபாரிகள்.
இதில் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டார்கள். மூன்று கிலோ மீட்டர் வரை நீண்ட இந்த மாபெரும் பேரணியில் ஒரு லட்சம் பேருக்கும் மேல் கலந்துகொண்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஜிஎஸ்டி-க்கு எதிராகக் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சூரத் நகரத்தில் வேலை நிறுத்தம் நடந்துவருகிறது. இதனால் சுமார் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு மேல் வர்த்தகர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் 15 லட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.