கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான கார்த்தியின் சுல்தான் படத்துக்கு பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடி வசூல் செய்த இப்படம் மூன்று நாட்களில் ரூ.16 கோடி வரை வசூல் செய்து கார்த்தியின் கேரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் சுல்தான் படத்தின் பைரஸி லிங்கை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவின் கமெண்ட் செக்ஸ்சனில் பதிவிட்டு சுல்தான் படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கின்றது என பதிவிட்டார்.
இதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, அடேய், என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரஸி ப்ரொமோட் பண்றீங்களா.. இதோ வரேண்டா என பதிவிட்டுள்ளார்.
Adeiii…. yen comment la vanthu en padaththukke piracy promote pandra alavukku valanthutteengala😂😂😂
Itho varandaaa….🤣🤣🤣 https://t.co/UogtsCBBBY
— SR Prabu (@prabhu_sr) April 4, 2021