சென்னை

விஜய் சேதுபதி வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி உலகளவில் பிரபலமாகி இந்திய மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. 2016 -ம் ஆண்டு முதல் தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவர் வெறும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக இல்லாமல் பல சினிமா அனுபவங்களையும் புத்தகங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தினார்.

கடந்த 7 ஆண்டுகளாக தொகுப்பாளராக பொறுப்பு வகித்த கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். கமல்ஹாசனுக்கு பதில் யார் பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல் முறையாக தொகுத்து வழங்க உள்ளதால் பிக் பாஸ் 8வது சீசன் மீதான எதிர்பார்பபு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.  இந்நிலையில் பிக்பாஸ் 8-வது சீசனின் புரோமோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.