டெல்லி: அனைத்து மாநிலங்களும் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்துவது தீவிரமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதில் பற்றாக்குறை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறியதாவது:
மாநிலங்கள் சரியான திட்டமிடுதலுடன் செயல்பட்டால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாது. தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. இம்மாத இறுதிக்குள் 2 கோடியே 1 லட்சத்து 22 ஆயிரத்து 960 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று கூறினார்.