டில்லி:
காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில முன்னாள் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து, அழகாக காட்சியளிக்கும் புகைப்படத்தை தனது டிவிட்டர் சமூக வலைதளத்தில் பதிட்டு பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.
இந்திய பெண்களுக்கான அடையாளமே சேலைதான். பெண்களின் அழகை மெருகூட்டுவதும் சேலைதான். ஆனால், இன்றைய நவநாகரிக உலகில் சேலையை அணிவதையே பல பெண்கள் கவுரவக்குறைச்சலாக கருதி வருகின்றனர். இந்த நிலையில், நமது தாய்நாட்டின் பாரம்பரிய உடையான சேலையை அணிந்த பிரியங்கா காந்தி அதை டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது அணிந்து இருந்த இளம் சிவப்பு பனாரஸ் பட்டு புடவை அணிந்த படத்தை பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது, “சாரி டுவிட்டர்” என்ற ஹேஸ்டேக்கில் பிரபலம் ஆகி வருகிறது. இதைத் தொடர்ந்து, பிரபலங்களான சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, பா.ஜனதாவை சேர்ந்த நிபுர்ஷர்மா, நடிகையும், காங்கிரசை சேர்ந்தவருமான நக்மா ஆகியோர் தாங்கள் சேலை அணிந்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு இருந்தனர்.