டெல்லி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மக்களை தவறாக வழி நடத்தும் அரசியலால் நாட்டுக்கு பயனில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 10 ஆம் தேதி பீகார், மேற்கு வங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.. தேர்தல் ஆணையத்தின் தகவல்படி தமிழகத்தின் விக்கிரவாண்டியில் அதிக அளவிலும், உத்தராகண்டின் பத்ரிநாத்தில் குறைந்த அளவிலும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடந்த இந்த முதல் இடைத்தேர்தல்களில் என்டிஏ-வுக்கும், இந்தியா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது.

நேற்றைய வாக்கு எண்ணிக்கையில், காலை முதலே பெரும்பாலான தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில்  இடைத்தேர்தல் நடந்த மொத்தம் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 10 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது..

தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,

“இந்திய மக்கள் நேர்மறையான அரசியலை விரும்புகின்றனர்; மக்களை  தவறாக வழிநடத்தும் அரசியல் நாட்டுக்கு பயன்தராது என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டுள்ளனர்”

என்று தெரிவித்துள்ளார்.’