டெல்லி

ன்று மக்களவையில் நடந்த அரசியல் சாசன விவாதத்தில் பிரியங்கா காந்தி முதன்முறையாக பேசி உள்ளார்.

வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி இன்று மக்களவையில் முதல் முறையாக பேசினார். இன்று நடந்த அரசியலமைப்பு குறித்த மக்களவை விவாதத்தின் போது பிரியங்கா காந்தி

“நமது விடுதலை போராட்டம் தனித்தன்மை வாய்ந்தது. நமது விடுதலை போராட்டம் அகிம்சை மற்றும் சத்தியத்தின் அடிப்படையில் நடைபெற்றது. அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி பங்களிப்புடன் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது.

அரசியல் சாசனம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது. நமது இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு துணிச்சல் கிடைத்தது. எவ்வளவோ சவால்கள் இருந்தும் மகளிர் போராட அரசியல் சாசனம் தைரியம் தருகிறது. நமது அரசியலமைப்பு நமக்கு பாதுகாப்பை வழங்கும் கவசம்.

ஆனால் 10 ஆண்டுகளில் ஆளும் அரசாங்கம் இந்த பாதுகாப்பை உடைக்க முயற்சிகளை மேற்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு குடிமகனால் ஒரு அரசை உருவாக்கவும் முடியும். தகர்க்கவும் முடியும். அரசியலமைப்பை மாற்றுவது பற்றிய விவாதங்கள் இந்த நாட்டில் வேலை செய்யாது என்பதை நடந்து முடிந்துள்ள தேர்தலின் மூலம் அவர்கள் (பாஜக) உணர்ந்துள்ளனர்.”

எனப் பேசினார்