நொய்டா :
ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடந்துவருகிறது.
இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, இன்று ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஹத்ராஸ் செல்ல முற்பட்டனர், அப்போது அவர்களை டெல்லி நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது, பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உ.பி. யில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக திரண்டு போராடினர், அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முற்பட்டனர்.
இந்த களேபரத்தில், போலீசாரின் தடியடியில் சிக்கிய ஒரு தொண்டரை பிரியங்கா காந்தி தடுத்து காப்பற்றினார், இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
பிரியங்கா காந்தியின் மனஉறுதியையும் தைரியத்தையும் பார்த்து, போராட்டம் என்ற பெயரில் தொண்டர்களை கூட்டி அவர்களை அடிவாங்க வைத்து வேடிக்கை பார்க்காமல், தொண்டர்களுக்காக போராடும் தலைவர்களும் இருக்கிறார்கள் என்று பாராட்டி வருகின்றனர்.