புதுடெல்லி: யோகி ஆதித்யநாத் அரசாங்கம், உத்திரப்பிரதேசத்தை ‘குற்றப் பிரதேசமாக’ ஆக்கிவிட்டது என்று காட்டமாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பிரியங்கா காந்தி.
சமீபத்தில், அம்மாநிலத்தில் விகாஸ் துபே என்ற கிரிமினல், டிஎஸ்பி, உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக் கொன்றார் மற்றும் அவரை இன்று காவல்துறை சுட்டுக் கொன்றது.
இந்நிலையில், பிரியங்கா காந்தி கூறியுள்ளதாவது, “விகாஸ் துபே போன்ற கிரிமினல்கள், ஆட்சியிலுள்ள நபர்களின் ஆசி மற்றும் ஆதரவுடன் செல்வாக்காய் வலம் வருவதோடு, பாதுகாப்பையும் பெறுகின்றனர்.
ஒட்டுமொத்த கான்பூர் நிகழ்வுத் தொடர்கள் குறித்து, தற்போது பணியிலுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் ஏற்படுத்தி, இந்த விஷயத்தை தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்றுள்ளார் பிரியங்கா காந்தி.