டெல்லி
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உண்மையான பிரச்சினை குறித்து விவாதிக்க விரும்பாததற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆண்டின் முதல் தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி உரையுடன் ர் தொடங்குவது வழக்கமாகும். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்
இன்றைய கூட்டத்தொடரில் ஜனாதிபதி முர்மு சுமார் 1 மணி நேரம் உரையாற்றிய பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. 011இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை (சனிக்கிழமை) தாக்கல் செய்கிறார்
பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம்,
“ உண்மையான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு விரும்பவில்லை. இதனால் கடைசி கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது, அதில் எந்த விவாதமும் நடக்கவில்லை. பிரச்சினைகளுக்கான சரியான பதில்களை மத்திய அரசு வழங்கவில்லை.”
என்று. தெரிவித்துள்ளார்.