டெல்லி: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாக மத்திய அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளார். அந்த அறிக்கையில் பிரியங்கா காந்தி கூறி இருப்பதாவது: கறுப்புச் சட்டம் எனும் வேளாண் சட்டத்தை அறிமுகப்படுத்தும்போது, பாஜக குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்போம் என்று தெரிவித்தது.
ஆனால், வேளாண் சட்டங்கள் மூலம் பெருமுதலாளிகளுக்கு மட்டுமே மோடி அரசு உதவி வருகிறது. அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நவம்பர் 26ஆம் தேதி தேசிய தலைநகரை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் பேரணியாகச் டெல்லி செல்ல உள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.