டில்லி

திடீர் உடல்நலக் குறைவால் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்கக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி திட்டமிட்டு இருந்த நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்  தாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தகவலை தனது எக்ஸ் தளத்தில் பிரியங்கா காந்தி பகிர்ந்துள்ளார்,

மேலும் தாம் உடல் நலம் தேறியதும் யாத்திரையில் பங்கேற்க உள்ளதாகவும் யாத்திரையில் பங்கேற்றுள்ள தனது சகோதரர் மற்றும் கட்சியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ‘எக்ஸ்’பதிவில் கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]