இந்தியில் வெற்றி பெற்ற ‘அந்தாகன்’ படத்தை தமிழில் டைரக்டு செய்து வருகிறார், தியாகராஜன்.
இந்த படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்தியில் ராதிகா ஆப்தே கதாநாயகியாக நடித்திருந்தார்.
தமிழில் அந்த வேடத்தை ஏற்றுள்ளார், பிரியா ஆனந்த்.
இந்தியில் தபு நடித்த கேரக்டரில் சிம்ரன் நடிக்கிறார்.
வனிதா விஜயகுமாருக்கு இந்த படத்தில் முக்கிய வேடம்.
“ஷுட்டிங் தளத்தில் பிரசாந்த் அமைதியாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர், கலகலப்பாக இருக்கிறார். தியாகராஜனை ஊரடங்கின் போது ஒரு முறை சந்தித்து பேசினேன். சினிமாக்கள் பற்றி விவாதித்தோம்.
அந்தாகன், உரிமையை வாங்கி இருப்பதாக கூறினார். அப்போது கதாநாயகி யார் என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை. நான் தெலுங்கு படப்பிடிப்புக்கு வெளியூர் சென்ற சமயத்தில், நான் தான் ஹீரோயின் என மெசேஜ் அனுப்பினார்” என்கிறார், பிரியா.
– பா. பாரதி