சென்னை:

நன்னடத்தை அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசுக்கு சிறைத் துறை பரிந்துரை செய்துள்ளது.

ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி நன்னடத்தை அடிப்படையில் தமிழக சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் தகுதியுடை சிறைவாசிகளின் பட்டியலை தயார் செய்து பரிந்துரை செய்யுமாறு சிறைத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வேலூர் சிறையில் தயாரிக்கப்பட்ட சிறைவாசிகளின் பட்டியலில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.