டெல்லி:

ச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் குற்றச்சாட்டுக்ளை கூறிய நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பிரதமரின் தூதுவராக,  முதன்மை செயலாளர் நிருபேந்திரா சந்தித்துள்ளார். இது டில்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள்  4 பேர் தலைமை நீதிபதி  தீபக் மிஸ்ரா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தனர்.  வரலாற்றிலேயே முதன்முறையாக இது நடைபெற்றது.

இந்த குற்றச்சாட்டு காரணமாக நீதித்துறை மீது களங்கம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வந்தனர்.

இந்த நிலையில், மத்திய சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பிரதமர் மோடியுடன் விவாதித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திரா சந்தித்து பேசியுள்ளார். இது டில்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.