லண்டன்:

காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக, தனது டிரைவில் லைசன்ஸை போலீஸாரிடம் ஒப்படைத்தார் 92 வயதான இங்கிலாந்து இளவரசர் பிலிப்.


கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் இரண்டாம் எலிசபெத் ராணிக்குச் சொந்தமான சந்திரிங்கம் கார்டனிலிருந்து 97 வயதான இளவரசர் பிலிப், லேண்ட்ரோவர் காரி்ல் வேகமாக வெளியே வந்தார்.

அப்போது அவரது கார், மற்றொரு கார் மீது பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இளவரசர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியபோதும், மற்றொரு காரை ஓட்டி வந்த பெண்ணின் கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

விபத்தை ஏற்படுத்தியதற்காக அந்த பெண்ணிடம் இளவரசர் பிலிப் மன்னிப்பு கேட்டார். பின்னர் தனது டிரைவில் லைசன்ஸை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

சில தினங்களுக்கு முன்பு கார் ஓட்டிய போது சீட் பெல்ட் அணியாததால், அவரை போலீஸார் நாசூக்காக அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.