மொனாகோவின் நாட்டின் இளவரசர் ஆர்பர்ட்-க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதை அரச குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்.
சீனாவில் இருந்து பரவி கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வருகிறது. கொரோனா தொற்றால் கனடா பிரதமர் உள்பட பல நாட்டு தலைவர்களும் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், மொனாக்கோ நாட்டு இளவரசர் ஆல்பர்ட்-2க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.
தற்போது 62 வயதான மொனாக்கோவின் அரச தலைவரும், உலகின் செல்வந்தர்களில் ஆல்பர்ட், கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மோராக்கோ நாட்டின் தலைவராக இருந்து வருகிறார்.
தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தனது தனியார் குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அங்குள்ள அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
40ஆயிரத்துக்கும் க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடானா மொனாக்கோவில் கொரோனா தொற்று பரவி உள்ளது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இதுவரை 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது, இளவரசருக்கும் கொரோனா பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அரச குடும்பத்தில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடப்பட்டுள்ளது. அதில், கொரோனா காரணமாக, மக்கள் எச்சரிக்கையுடனும், அமைதியான முறையில் மற்றவர்களுடனான தொடர்பை மட்டுப்படுத்தவும் வலியுறுத்துகிறது.
“இந்த தனிமைப்படுத்தப்படும் சிறைவாச நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம் மட்டுமே கொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்த முடியும்.” என்றும் கூறி உள்ளது.