டில்லி:

ன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, யார் பிரதமர் என்பதை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23ந்தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று  ராகுல்காந்தி கூறினார்.

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைந்த நிலையில், 5 ஆண்டு களுக்குப் பின் முதல் முறையாக பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் செய்தியாளர் சந்திப்பு நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பை நேரலையில் பார்த்த ராகுல் காந்தி, செய்தியாளர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளிக்காமல் தவிர்த்ததைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

ரபேல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, என்னுடன் ஏன் விவாதம் நடத்த வில்லை? என விமர்சனம் செய்தார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்திலும் கிண்டல் செய்தார்.

இந்த நிலையில்,  இந்தத் தேர்தலில் மக்கள் தீர்ப்பிற்கு தலைவணங்க காத்திருக்கிறோம் என்றவர்,  பாஜகவிடம் உள்ள அதிகாரம், பண பலத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும் தான் இந்தத் தேர்தலில் நிஜமான போட்டி நிலவியது. கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தி இருப்பதாக தெரிவித்தவர்,  இந்தத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை மக்கள் உற்று நோக்குகிறார்கள் என்று தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

மேலும், இந்த தேர்தலில் எதிர்க்கட்சியாக எங்கள் செயல்பாடு திருப்திகரமாக இருந்தது என்று கூறியவர்,  யார் பிரதமர் என்பதை 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுக்குப் பின்னரே முடிவு செய்வோம். மக்கள் தீர்ப்பை மதித்து, கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு ராகுல் கூறினார்.