மாஸ்கோ :
2018- குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென் கொரியாவில் நடைபெற்றது. இதில் ரஷ்யா வீராங்கணை அலினா சகிடோவா (வயது 16) பனிசறுக்கு போட்டியில் தங்கம் வென்றார்.
ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு அவர் ஜப்பானில் பயிற்சி பெற்றார். அப்போது ஜப்பானிவ் அகிடா இன நாய்கள் மீது அலினா சகிடோவாவுக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் அந்த நாயை பரிசாக அளிக்க வேண்டும் என அவரது பெற்றோரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் ரஷ்யாவில் நடைபெறும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அவரது மனைவியுடன் சென்றார். அங்கு மசறு என பெயர் சூட்டப்பட்ட 3 மாத அகிடா இன நாய்க் குட்டியை அலினா சகிடோவாவிற்கு பரிசாக வழங்கினார்.