டோக்கியோ: அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பயணித்தார்.

பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான் சீனா பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஆகஸ்டு 29, 30ந்தேதிகளில் ஜப்பானில் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். ஆகஸ்ட் 29 அன்று டோக்கியோவில் நடைபெற்ற வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர், ஜப்பான் மாகாண ஆளுநர்களைச் சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.
இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று ஜப்பானில் உள்ள சுமார் 16 மாகாணங்களின் கவர்னர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது இந்திய அரசு மற்றும் ஜப்பான் மாகாணங்கள் இடையிலான கூட்டு ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

தனது ஜப்பான் பயணத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நாளான சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30), பிரதமர் நரேந்திர மோடி செண்டாய் நகருக்கு சென்றார். பிரதமர் மோடி, ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் புல்லட் ரயிலில் டோக்கியோவிலிருந்து செண்டாய் நகருக்குப் பயணம் செய்தார். பிரதமர் மோடி, ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் புல்லட் ரயிலில் டோக்கியோவிலிருந்து செண்டாய் நகருக்குப் பயணம் செய்தார். செண்டாய் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான ஜப்பானிய மக்கள், சில இந்திய வம்சாவளியினர் உட்பட, அவரைப் பார்க்கக் கூடி மோடி சான் என்று கோஷமிட்டு வரவேற்றனர்.
ரயில் நிலையத்திலிருந்து அவர் வெளியே வந்தவுடன், நூற்றுக்கணக்கான ஜப்பானிய மக்கள் மற்றும் சில இந்தியர்கள் அவரை மோடி சான், ஜப்பானுக்கு நல்வரவு என்று கூறி வரவேற்றனர். பிரதமர் புன்னகையுடன் கூட்டத்தினரை நோக்கி அசைத்து, குழந்தைகளுடன் கைகுலுக்கினார். ஜப்பானிய மொழியில் சான் என்பது ஒரு மரியாதைச் சொல்லாகும். இது தமிழில் திரு என்பதற்கு இணையானது. இது அவர் பெற்ற வரவேற்பின் அன்பான தன்மையை எடுத்துரைக்கிறது.
செண்டாய் பயணத்தின்போது, பிரதமர் மோடி, பிரதமர் இஷிபா ஏற்பாடு செய்த மதிய விருந்தில் கலந்துகொள்ள உள்ளதாகவும், ஒரு செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தையும் பார்வையிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பின்னர், இரு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியா ஜப்பானுடன், E10 ஷின்கான்சென் புல்லட் ரயில்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான கூட்டாண்மையை இந்தியாவும் ஜப்பானும் எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கை அகமதாபாத்-மும்பை அதிவேக ரயில் திட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும், இதன் மொத்த நீளம் 508 கி.மீ. ஆகும். அந்த வகையில் அங்குள்ள புல்லட் ரயிலில் பிரதமர் பயணித்தார்.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன், பிரதமர் மோடி E5 ஷின்கன்சனின் எனும் அதிகபட்ச வேகம் கொண்ட மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் செண்டாய் நகரத்திற்குச் சென்றார். அதே நேரத்தில் ஜப்பானில் இன்னும் சோதனைகளில் உள்ள E10 ஷின்கன்சன் மணிக்கு 400 கிமீ வேகத்தில் இயக்கப்படும் புல்லட் ரயில் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், புல்லட் ரயிலை இயக்க பயிற்சி பெற்று வரும் இந்தியர்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
https://www.youtube.com/watch?v=EyT1HvPw-t4

இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில். அவர் தனது பயணத்தின் படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டு, “செண்டாய் சென்றடைந்தேன். பிரதமர் இஷிபாவுடன் ஷிங்கன்சென் ரயிலில் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இன்று காலை டோக்கியோவில், ஜப்பானின் 16 மாகாணங்களின் கவர்னர்களுடன் கலந்துரையாடினேன். இந்தியா-ஜப்பான் நட்பின் முக்கிய தூணாக மத்திய அரசு-மாகாண அரசு ஒத்துழைப்பு உள்ளது. இதனால்தான் நேற்று நடைபெற்ற 15-வது ஆண்டு இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டின்போது இது குறித்த தனி இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் வர்த்தகம், புதுமை, தொழில்முனைவு மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்த மகத்தான வாய்ப்புகள் உருவாகும். புதிய நிறுவனங்கள், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலத் துறைகளும் பயன்பெறும்” என்று பதிவிட்டுள்ளார்.