ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அத்துடன் அந்த வழியில் வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.

இந்த செனாப் ரயில் பாலமானது, அந்த பகுதியில் ஓடும், ஆற்றுப் படுகையிலிருந்து 359மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவர்எனப்படும் ஈபிள் கோபுரத்தை விட 35மீ அதிக உயரம் கொண்டது. 1.31 கி.மீ நீளமுள்ள செனாப் ரயில் பாலமானது, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்ரா-ஸ்ரீநகர் இடையேயான அமைக்கப்பட்டு உள்ளது.

உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமான செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, அந்த பாலத்தில்தேசிய கொடியுடன் சிறிதுதூரம் நடந்து சென்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர்: கத்ரா மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை கத்ரா ரயில் நிலையத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, பிரதமர் மோடி, கத்ரா ரயில் நிலையத்திலிருந்து கத்ராவையும் ஸ்ரீநகரையும் பிரதமர் நரேந்திர மோடி, ரயிலில் இருந்த பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார். ரயிலில் இருந்த ரயில்வே ஊழியர்களுடனும் கலந்துரையாடினார்.
