டெல்லி:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று, நாடு முழுவதும் உள்ள 40 விளையாட்டுத்துறை பிரபலங்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடினார்.
நாட்டு மக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விளையாட்டு பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் மற்றும் விராட் கோலி. பி.வி.சிந்து, ராணி ராம்பால் உள்பட பி.டி.உஷா, புல்லேலா கோபிசந்த், விஸ்வநாதன் ஆனந்த், ஹிமா தாஸ், பஜ்ரங் புனியா, ரோஹித் சர்மா, வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், மற்றும் சேதேஷ்வர் புஜாரா 40 பிரபல விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வீடியோ கான்பரன்சிங் வழியாக ஆலோசனை நடத்தினார்
கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய மாநில அரசுகள் செயலாற்றி வருகின்றன. இந்தநிலையில், மக்களிடையே மேலும் சமூக விலகலை வலியுறுத்தும் வகையில், பிரபல விளையாட்டு பிரமுகர்களுடன் மோடி கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.