டில்லி:
பிரதமர் மோடி 3 நாள் அரசு முறைப்பயணமாக இன்று(ஜூலை-4) இஸ்ரேல் பயணமாகிறார். இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.
அரசு முறைப்பயணமாக இஸ்ரேல் செல்லும் மோடி, அங்கு அந்நாட்டு பிரதமர், அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார். இந்த பேச்சு வார்த்தையின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ள மோடி, ஹைபாவில் உள்ள இந்திய ராணுவ நினைவிடத்தில், அஞ்சலி செலுத்த உள்ளார்.
இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, அதன் நினைவாக பிரதமரின் இந்த பயணம் அமைவதாக கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தடவை மோடி வெளிநாட்டுக்கு பறக்கும்போது, இந்தியாவில் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்புகளை வெளியிட்டு செல்வது வழக்கம்.
ஏற்கனவே பண மதிப்பிழப்பு செய்யப்படும்போதும், இதுபோல அறிவித்துவிட்டு வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார்.
சாமானிய மக்களின் துயர்களை கண்டுகொள்ளாமல் வெளிநாடுகளுக்கு செல்வது அவரது வாடிக்கையான நிகழ்வு என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வரும் நிலையில்,
தற்போது ஜிஎஸ்டியை அமல்படுத்திவிட்டு, தனது வெளிநாட்டு பயணத்தை மீண்டும் தொடங்கிவிட்டார் பிரதமர் மோடி.