தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

south

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தென்கொரியா சென்றுள்ளார். இன்று தென்கொரிய தலைதகர் சியோல் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் பிரபல உணவகத்தில் பிரதமர் மோடியை சந்தித்த இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஏற்கெனவே தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து அந்நாட்டிற்கு மோடி சென்றுள்ளார். இது அவரின் 2வது தென் கொரிய சுற்றுப்பயணமாகும். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான் உறவை மேலும் வலுப்படுத்துவதுடன் முக்கிய ஆலோசனைகளும் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தென்கொரிய செல்வதற்கு முன்னதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், “ மேக் இன் இந்தியா உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் தென்கொரியா தென்கொரியாவும் இணைந்து செயல்படுகிறது. இரு நாடுகளும் சர்வதேச அமைதி உள்ளிட்டவற்றில் தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளன “ என தெரிவித்தார்.