மதுரை:   மதுரையில் மார்ச்  1-ந்தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும்  பிரதமர் நரேந்திர மோடி, அப்போது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலை தமிழ்நாடு அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது. இந்த மாறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக, அதிமுக கூட்டணி தீவிரமாக செயலாற்றி வருகின்றன.  மற்றொரு புறம்  நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, களத்தில் இறங்கி  உள்ளது. அதுபோல விஜய்யின் தவெகவும் களத்தில் இறங்க தயாராக உள்ளது. இதனால் அரசியல் களம் அனல்பறக்கத் தொடங்கி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆதரவு திரட்ட,   பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா  உள்பட பல வட நாட்டு தலைவர்கள் தமிழ்நாடு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், திமுகஅரசால், சர்ச்சையை ஏற்படுத்திய  திருப்பரங்குன்றம் முருகன் கோவில் விவகாரத்தில், மீண்டும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி தரிசனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி  மார்ச் ஒன்றாம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை தரிசனம் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்பு படையினரும், மதுரை போலீசாரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மேலும்,  கருவறைக்கு முன்னதாக உள்ள மகாமண்டபத்தின் படிக்கட்டுகளில் பிரதமர் ஏறி கருவறைக்கு எளிதாக சென்று வர வசதியாக படிக்கட்டுகளை சீரமைப்பது குறித்தும் கோவில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த திருத்தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஜனாதிபதி வெங்கட்ராமன் சாமி தரிசனம் செய்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் வாசல் வழியாக சென்ற அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் காரில் இருந்தபடி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]