குஜராத்:
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை, 19 ஆண்டுகளுக்குப் பின் போலீசார் கைது செய்துள்ளனர்.
2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையம் அருகே சமர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டதில், அதில் பயணித்த கரசேவகர்கள் 59 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பலியாயினர். கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தொடர்புடைய குழுவில் இடம்பெற்றிருந்த ரபீக் ஹுசேன் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின் அவனை தற்போது கைது செய்துள்ளனர்.
52 வயதான ரபீக் ஹுசேன் டெல்லியில் பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.