டில்லி
தனது மனைவியில் கள்ளக்காதலனைக் கொன்று கோயிலில் மறைத்து வைத்த பூசாரியும் அவர் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டில்லியின் சாதரா நகரில் உள்ள காந்திநகரில் ஒரு கோயிலில் பூசாரியாக பணி புரிபவர் 30 வயதான லக்கான் என்பவர். இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கும் சந்திரசேகர் (வயது 35) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதை தெரிந்துக் கொண்ட லக்கான் மனைவியுடன் சண்டை இட்டுள்ளார். லக்கானின் மனைவி சந்திரசேகருடனான தொடர்பை நிறுத்தி விட ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அவரை கொலை செய்ய உதவுவதாகவும் கூறியுள்ளார்.
லக்கானின் மனைவி சந்திரசேகருடன் தொலைபேசியில் பேசி தனது கணவருக்கு அவர்கள் கள்ளத் தொடர்பு தெரிந்துவிட்டதால் அவசரமாக பேச வருமாறு அழைத்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அவரை காணச் சென்ற சேகரை இருவருமாக கோவிலின் ஸ்டோர் ரூமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்கு வலுக்கட்டாயமாக தூக்கமருந்து கொடுத்துள்ளனர். பிறகு அவரது தலையில் அடித்து அப்போதும் அவர் சாகாததால் மூச்சுத் திணறல் ஏற்படுத்தி கொன்றுள்ளனர்.
அதன் பிறகு அவரது உடலை எரிக்க முயன்றுள்ளனர். உடல் சரியாக எரியாததால் அந்த பிணத்தை யாருக்கும் தெரியாமல் கோயிலின் ஸ்டோர் ரூமில் வைத்துள்ளனர். பிறகு போலீசாரிடம் கோயில் ஸ்டோர் ரூமில் யாரோ புகுந்துள்ளதாக சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். அங்கு கருகி அழுகிய நிலையில் சேகரின் சடலம் கிடைத்துள்ளது.
கோயிலின் ஸ்டோர் ரூமுக்குள் ஒரே வழி இருப்பதால் லக்கானுக்கு தெரியாமல் யாரும் உள்ளே வர வாய்ப்பில்லை என கண்டுபிடித்த போலீசார் லக்கானை விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் நடந்தவைகளை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். லக்கான் மற்றும் லக்கானின் மனைவியில் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.