இந்தியப் பிரதமரின் அழைப்பையேற்று இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து இளவரசர் மற்றும் இளவரசி தொழிற்நுட்ப கண்டுபிடிப்பு கண்காட்சியை பார்வையிட்டனர்.
அவர்கள் வருகை குறித்து பத்திரிக்கை.காமில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகிய இருவரும் தானியங்கி தோசைக்கருவி உருவாக்கிய நான்கு தொழில்முனைவோரைச் சந்தித்தனர். சென்னை SRM கல்லூரி பட்டதாரி மற்றும் நிறுவனர் விகாஸ் ஈஸ்வர் தமது கைகளால் அவர்கள் இருவருக்கும் உணவு பரிமாரும் வாய்ப்பைப் பெற்றார்.
இணை-நிறுவனர் சுதீப் சபாத் இந்த தோசைக் கண்டுபிடிக்கும் கருவியை தயாரிக்க உந்துசக்தியாய் இருந்து தங்களை வசியம் செய்தது சென்னை தோசை தான். அவர்கள் கல்லூரியில் பயின்ற போது தோசைக்கு அடிமையானார்கள். ” படிப்பை முடித்தப் பிறகு உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், சென்னையில் கிடைத்தது போல் மொறு மொறு தோசை கிடைக்காதது தான் எங்களை இந்த கண்டுபிடிக்க உதவியது” என்றார்.
கடந்த வருடம் இந்தியப் பிரதமர் அமெரிக்கா சென்ற போது, ஒரு தொழிற்நுட்ப கண்காட்சியில் தங்களின் கண்டுபிடிப்பை ஈஸ்வர் மோடிக்கு விளக்கம் காட்டியிருந்தார். அப்போது மோடி தோசையை சாப்பிடவில்லை. ஆனால், இம்முறை இளவரசர் மற்றும் இளவரசி வெளி உணவை உண்ணாத தங்களின் பழக்கத்தை உடைத்து, தங்களின் கண்டுபிடிப்பை பார்வையிட்ட தோடல்லாமல், தாங்களே தோசையை வார்த்து, அதனை ருசி பார்த்து உண்டது தங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ஈஸ்வர் பெருமையுடன் தெரிவித்தார்.
இவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளவரசர் வில்லியம் தங்களுடைய பக்கின்காம் மாளிகைக்கு ஒரு கருவியை பார்சல் அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். இந்த தோசைக் கருவியில் கேக் மற்றும் கிரீப்ஸ் (cakes and crepes) செய்ய முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இதே நிகழ்ச்சியில் மஹந்திரா பந்தயக் கார், முத்ரா திட்டத்தின் பார்வையற்றோர் கற்கும் கருவி உட்பட மேலும் பல கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.
.