டெல்லி

மிழக செஸ் வீரர் குகேஷ் உஅலக சாம்பியன் பட்டம் வென்றதற்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் நடந்து வந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி துயில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. முடிவில் இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

இன்று நடைபெற்ற 14-வது மற்றும் கடைசி சுற்று போட்டியில், 58-வது நகர்த்தலில் டிங் லீரெனை (7.5 – 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்று இதன் மூலம் தமிழக வீரரான குகேஷ் உலக சாம்பியன் ஆனார். குகேஷ் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.குகேஷுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் வலைதளத்தில்,

“உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இளம் வீரர் குகேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றி இந்தியாவின் அதிகாரத்தை ஒரு சதுரங்க சக்தியாக முத்திரை குத்துகிறது. சபாஷ் குகேஷ்! ஒவ்வொரு இந்தியர் சார்பாகவும், நீங்கள் எதிர்காலத்தில் புகழ் பெற வாழ்த்துகிறேன்”

என்று  பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில்,

“இது ஒரு வரலாறு மற்றும் முன்மாதிரி..! அவரது குறிப்பிடத்தக்க சாதனைக்கு குகேஷ்-க்கு வாழ்த்துகள். இது அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றின் விளைவே அவரது வெற்றி, சதுரங்க வரலாற்றின் வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்”

என்று  பதிவிட்டுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  எக்ஸ் தளத்தில்,

”இந்தியர்களை பெருமைப்படுத்திவிட்டாய் குகேஷ்..! மிகவும் இளம் வயதில் மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளாய். அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் எதுவும் சாத்தியம் என்பதை எங்களுக்கு நீ நிரூபித்துவிட்டாய்.. வாழ்த்துகள் சாம்பியன்”

என்று பதிவிட்டுள்ளார்