டில்லி,
குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என டில்லி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை 24ந்தேதி தற்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைகிறது. அதையடுத்து புதிய குடியரசு தலைவர் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆளும் பாரதியஜனதா சார்பாக ஆர்எஸ்எஸ் இயக்க தலைவரை குடியரசு தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
பாரதியஜனதா அறிவிக்கும் வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சியினருடன் சோனியா காந்தி ஆலோசித்து வருகிறார். சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா, பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து தலைவர்களும் பொதுவேட்பாளர் குறித்து ஆலோசித்தனர்.
அதைத்தொடர்ந்து ஆந்திராவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்திலும் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்ளுடன் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து எதிர்க்கட்சி சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமார் அல்லது முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்தலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை குடியரசு தலைவர் தேதி அறிவிக்கப்படலாம் என டில்லி வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று மாலை தலைமை தேர்தல் கமிஷன் ஜைதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.