டில்லி

விமானப் பணிப்பெண்ணாக இருந்த ஜனாதிபதியின் மகளுக்கு கடந்த ஒரு மாதமாக அலுவலக வேலைகள் தறப்பட்டுள்ளது.

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகள் ஸ்வாதி.  இவர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணி புரிந்து வருகிறார்.  இவர் வழக்கமாக போயிங் 787 மற்றும் போயிங் 777 விமானங்களில் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.  நெடுந்தொலைவு பறக்கும் இந்த விமானங்களில் அவருக்கு பணிகள் தரப்பட்டிருந்தன.

தற்போது ஏர் இந்தியா விமான நிர்வாகம் அவரை அலுவலகத்தில் பணி புரியுமாறு கூறி உள்ளது.   கடந்த ஒரு மாதமாக ஸ்வாதி விமான நிலைய தலைமை அலுவலகத்தில் பணிகளை மேற்கொண்டுள்ளார். இது குறித்து ஏர் இந்தியா அதிகார் ஒருவர், “ஸ்வாதி ஜனாதிபதியின் மகளாக இருப்பதால் அவரை விமானப் பணிகளில் பாதுகாப்புக் காரணங்களுக்காக அமர்த்த இயலவில்லை.   அவருடன் கூட வரும் பாதுகாவலர்களுக்காக பயணிகளின் இருக்கைகள் ஒதுக்கப் பட  வேண்டியுள்ளது.  அதன் காரணமாக அவர் அலுவலகப் பணியில் ஈடு படுத்தப் பட்டுள்ளார்” என கூறி உள்ளார்.