ஜனாதிபதி தேர்தல்: காங். தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்!

Must read

டில்லி,

னாதிபதி தேர்தலில் ஆளும் பாரதியஜனதா கட்சி வேட்பாளருக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் சார்பில் பலமான வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள்  ஒருமித்த வேட்பாளரை தேர்வு செய்ய எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று கூடுகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில்  சோனியா காந்தி தலைமையில் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, சரத் யாதவ், லாலுபிரசாத் யாதவ், சீதாராம் யெச்சூரி, தி.மு.க.வின் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் உள்ளனர்.

ஏற்கனவே எதிர்கட்சியினருடன்  பலகட்ட பேச்சு வார்த்தைகளை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியுள்ள நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

ஆளும்  பா.ஜ.க. வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகே, எதிர்க்கட்சிகள் சார்பாக வேட்பாளர் குளித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

 

More articles

Latest article