அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட தேவையான ஆதரவு அவருக்கு கிடைத்ததை அடுத்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப்-பை எதிர்த்து களம்காண்கிறார்.
டிரம்ப்பை எதிர்த்து தனது பிரச்சாரத்தை துவங்க உள்ள கமலா ஹாரிஸ் அதற்கு முன் தனது துணை அதிபரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இந்த வார இறுதியில் துணை அதிபரை வேட்பாளருக்கான நேர்காணலை அவர் நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் கென்டக்கி மாகாண ஆளுநர் ஆண்டி பெஷியர், இல்லினாய்ஸ் ஆளுநர் ஜே.பி. பிரிட்ஸ்கர், பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ, மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் மற்றும் அரிசோனா ஆளுநர் சென். மார்க் கெல்லி மற்றும் அமெரிக்க போக்குவரத்துச் செயலர் பீட் புட்டிகீக் ஆகியோர் இந்த நேர்காணல் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.