டெல்லி
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல மாநில ஆளுநர்களை மாற்றி சில மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்..
குடியரசுத் தலைஇவர் திரவுபதி முர்முநாடெங்கும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் செய்து ஒரு சில மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில புதிய துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனித்து வந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித்தின் ராஜினாமாவை தொடர்ந்து அம்மாநிலத்துக்கு ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியாவும், சிக்கிம் ஆளுநரான லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் கவர்னராகவும் மாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மணிப்பூர் ஆளுநராக அவருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது,
ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநக கூடுதல் பொறுப்பு அவர் வகித்து வந்த நிலையில், அம்மாநில புதிய ஆளுநராக சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டேவும், தெலுங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும், சிக்கிம் மாநிலத்தின் புதியஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் தேகாவும், மேகாலயா ஆளுநக சி.எச்.விஜயசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.