
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தமிழக அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் அளித்துவிட்டன. இந்த நிலையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக இந்த சட்ட முன்வடிவு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இன்று குடியரசு தலைவர் கையெழுத்திட்டார்.
“இனி ஜல்லிக்கட்டுக்கு எவ்வித தடையும் ஏற்படாது” என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
[youtube-feed feed=1]