டில்லி

த்திய அமைச்சரவை ஒப்புதலின் அடிப்படையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி உறுப்பினர் ராஜினாமா செய்ததால் புதுச்சேரி அரசு பெரும்பான்மை இழந்தது.  இதையொட்டி கடந்த 22 ஆம் தேதி முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தைத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வழங்கினார்.

அதை தமிழிசை சவுந்தர்ராஹன் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி குடியரசு தலைவர் ஆட்சியை அமல் படுத்தப் பரிந்துரை செய்தார்.  இன்று மத்திய அமைச்சரவை கூடி புதுச்சேரி விவகாரம் விவாதிக்கப்பட்டு புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க ஒப்புதல் அளித்தது.

இந்த ஒப்புதலை ஏற்றுக் கொண்ட ராம் நாத் கோவிந்த் குடியரசு தலைவர் ஆட்சிக்கு அவரும் ஒப்புதல் அளித்தார். அதையொட்டி புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.