சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத் திறப்பு விழா இன்று மாலை விமரிசையாக தொடங்கி உள்ளது. முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் சென்னை வந்தடைந்தார். பின்னர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுத்தவர், சட்டமன்ற விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாலை 5 மணி அளவில் சட்டமன்றம் வருகை தந்தார்.

அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்பட அமைச்சர்கள் அதிகாரிகள் வரவற்றனர். அவருடன் கவர்னர் பன்வாரிலும் வருகை தந்தார். தொடர்ந்து விழா தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா தொடங்கியது. தொடர்ந்து குடியரசுத்தலைவர் உரையாற்றினார்.
[youtube-feed feed=1]