கொழும்பு: இலங்கையில் இன்று மேலும் 8பேர் பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவையில், புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு இலங்கை அதிபர் கோத்தபய பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினர். ராஜபக்சே குடும்பத்தினர், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரம் நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறைக்களமாக மாறியதால், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கேபதவியேற்று இருந்தார். அவருடன் சில அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இருந்தாலும், அதிபர் பதவியில் இருந்து கோத்தபய பதவி விலக வேண்டும் என, மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது.
இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் இன்று இலங்கையில் மேலும் 8பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்று காலை 11:06 மணிக்கு இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
புதிய அமைச்சர்களாக, கெஹலிய ரம்புக்வெல்ல- நீர் வழங்கல் அமைச்சு ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசன அமைச்சு விதுர விக்ரமநாயக்க – கலாசார அமைச்சு டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சு பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு ரமேஷ் பத்திரன – தொழிற்சாலை அமைச்சு நசீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சு மஹிந்த அமரவீர – விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளனர்.