டெல்லி:
யுபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் டேவிட் ஆர். சியாம்லே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.

இவர் வரும் 4ம் தேதி பதவி ஏற்கவுள்ளார் என கூறப்படுகிறது. மேகாலயா மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முதல் யுபிஎஸ்சி உறுப்பினராக இருந்து வருகிறார்.
63 வயதாகும் இவர் 2018ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி ஓய்வுபெறுகிறார். அது வரை இந்த பதவியில் அவர் இருப்பார்.
[youtube-feed feed=1]