டெல்லி:
நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
விழாவில் குடியரசு தின சிறப்பு விருந்தினர் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ பங்கேற்று குடியரசு விழா நிகழ்ச்சியை கண்டு களித்து வருகிறார்.
71-வது குடியரசு தினம் தலைநகல் டெல்லியில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
குடியரசு தின விழாவில் எம்.ஐ.17 வி.5 ஹெலிகாப்டர்கள் ராஜபாதையில் மலர் தூவிக்கொண்டு அணிவகுத்து சென்றன. தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்ற வருகிறது. தொடர்ந்து, நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறுகிறது.
விழாவில் பிரதமர் மோடி, அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, மக்களவை சபாநாயகர் உள்ளிட்டோர் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றனர்.
முன்னதாக பிரதமர் மோடி டெல்லியுள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதன் மூலம் கடமையில் உயிரை இழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் பிரதமர் மோடி நாட்டை வழிநடத்துகிறார். அவருடன் சி.டி.எஸ் ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தலைவர் ஜெனரல் நாரவனே, கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், விமானப்படைத் தலைவர் ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதுரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியரசு தின விழா தொடர்பான வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…
https://www.youtube.com/watch?v=wMQ6tkrMh1w&feature=youtu.be