டெல்லி: ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5,0,0100 நன்கொடை வழங்கி இருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமர் கோயில் கட்ட நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந் நிலையில் விஎச்பி தலைவர் அலோக் குமார், ஆர்.எஸ்.எஸ் மூத்தத் தலைவர் குல்பூஷன் அகுஜா, ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா மற்றும் ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி ஆகியோர் இன்று குடியரசுத் தலைவரை அவரது மாளிகையில் சந்தித்தனர்.
அவர்களிடம் ராம்நாத் கோவிந்த் ரூ.5,0,0100 நன்கொடையை வழங்கினார். இது குறித்து விஎச்பி தலைவர் அலோக் குமார் கூறியதாவது: ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன், எனவே அவரிடம் நாங்கள் சென்றோம். அவர் 5,01,000 ரூபாய் நன்கொடை அளித்தார் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, ராமர் கோயில் கட்ட மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் 1 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார்.