திருவனந்தபுரம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதல்முறையாக சபரி மலை அய்யப்பனை தரிசிக்க கேரளா வருகை தர உள்ளார். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதுடன், அன்றைய தினம் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் குடியரசுத் தலைவர் ஒருவர் சபரிமலைக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 22 ஆம் தேதி (புதன்கிழமை) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபடுகிறார். இதையொட்டி, வரும் 21 ஆம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் துலாம் மாத (ஐப்பசி) பிறப்பை முன்னிட்டு நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கோவில் தந்திரிகண்டரு மகேஷ் மோகனரூ தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்தார். . இதனைத் தொடர்ந்து ஆழிக்குண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. அத்துன் கோவில் நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வருகை தந்து அய்யப்பனை தரிசித்துசெல்கின்றனர்.
இந்த நிலையில், வரும் புதன்கிழமை(அக்.22) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலையில் ஐயப்ப சுவாமியை வழிபாடு மேற்கொள்கிறார். இதனையொட்டி, வரும் 21 ஆம் தேதி பிற்பகல் வரையே சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பிற்பகலில் சபரிமலை, பம்பை , நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட உள்ளது.
. குடியரசுத் தலைவர் சிறப்பு விமானத்தில் வரும் 21 ஆம் தேதி திருவனந்தபுரம் வருகிறார். அன்று இரவு ராஜ்பவனில் தங்கிவிட்டு மறுநாள் காலை 9 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்ட ர் மூலம் நிலக்கல் வருகிறார். பின்னர் காரில் பம்பை வரை செல்கிறார். அங்குள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு, சபரிமலை செல்கிறார்.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய தேவசம் போர்டு அதிகாரிகள் , குடியரசு தலைவர் முர்மு, பம்பை நதியில் நீராடி இருமுடி கட்டிச்செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
இதற்கிடையில் குடியரசு தலைவரின் பயண விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி,
சபரிமலை செல்ல வேண்டி ஜனாதிபதி திரௌபதி முர்மு வரும் 21 ஆம் தேதி திருவனந்தபுரம் வந்து ராஜ்பவனில் தங்குகிறார்.
22 ஆம் தேதி காலை அங்கிருந்து, ஹெலிகாப்டரில் நிலக்கல் வருகிறார். நிலக்கலில் இருந்து சாலை வழியாக பம்பாவை அடையும் அவர் பம்பா நதியில் நீராடவும் திட்டமிட்டுள்ளார்.
பின்னர் பம்பாவிலிருந்து மலையேறி புதிய கூர்க்கா ஜீப்பில் சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
நாட்டின் குடியரசுத் தலைவர் ஒருவர் சபரிமலைக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
https://patrikai.com/president-draupadi-murmu-will-visiting-sabarimala-security-arrangements-intensified/