டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக ரஃபேல் விமானத்தில் பறந்தார். ஏற்கனவே முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீஸ் போர் விமானத்தில் பறந்துள்ள நிலையில், தற்போது முர்மு பறந்து சாதனை படைத்துள்ளார்.
இதன் காரணமாக, இந்திய போர் விமானத்தில் பறந்த மூன்றாவது தலைவராகவும், இரண்டாவது பெண் தலைவராகவும் திரவுபதி முர்மு விமானப்படை வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அக்டோபர் 29, 2025 அன்று ஹரியானா மாநிலத்தின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் இருந்து ராணுவ வீரர்களுடன் இந்தியாவின் மிகுதல் நவீன போர் விமானங்களில் ஒன்றான ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார். இது அவருக்கு போர் விமானத்தில் பறந்த, முதல் பயணமாக அமைந்தது.
முன்னதாக விமான படைத்தளத்துக்கு வந்த அவருக்கு சிறப்பு காவல் மரியாதை அளிக்கப்பட்டது, பின்னர் விமானம் அவர் ஏறியதும், விமானம் உயரே பறந்தது. இந்தப் பயணம், இந்திய விமானப்படையின் திறன்களை அறிந்து கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏற்கனவே 2023 ஏப்ரல் 8 அன்று, அஸ்ஸாம் மாநிலத்தின் தெஜ்பூர் விமானப்படைத் தளத்தில் இருந்து சுகோய்-30 MKI போர் விமானத்தில் திரௌபதி முர்மு பறந்திருந்தார். அப்போது அவர் 30 நிமிடங்கள் விமானம் பறந்து, பிரம்மபுரா ஆறு மற்றும் தெஜ்பூர் பள்ளத்தாக்கை சுற்றிய விமானம் செய்தார். இது அவரது போர் விமானப் பயணத்தின் முதல் முறையாக இருந்தது. இந்தப் பயணங்கள், குடியரசுத் தலைவராக இந்திய ஆயுதப்படைகளின் உச்சத் தளபதியாக அவரது பொறுப்பை வலியுறுத்துகின்றன.
இதையடுத்து தற்போதைய குடியரசு தலைவர், திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பறந்து சாதனை படைத்துள்ளனர். அவரின் இந்தப் பயணம், இந்தியாவின் விமானப்படை திறன்களை வலியுறுத்தும் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது.

அம்பாலா விமானப்படைத் தளம், இந்தியாவின் ரஃபேல் விமானங்களின் முதல் தளமாக 2020 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2019-ல் பிரான்ஸிடமிருந்து வாங்கப்பட்ட 36 ரஃபேல் விமானங்களின் தளமாக செயல்படுகிறது. மேலும், 2025 மே மாதத்தில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இந்தத் தளம் முக்கிய பங்கு வகித்தது. அப்போது ரஃபேல் விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படையை (PAF) வென்று, இந்தியாவின் பாதுகாப்பு திறனை நிரூபித்தன.
ஏற்கனவே போர் விமானங்களில், முன்னாள் குடியரசுத் தலைவர்களான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (2006) மற்றும் பிரதிபா பாட்டில் (2009) பற்நதுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தற்போத முர்மு போர் விமானத்தில் பறந்த மூன்றாவது தலைவராகவும், இரண்டாவது பெண் தலைவராகவும் உள்ளார்.