டெல்லி
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சிவராத்திரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் சிவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகை மகாசிவராத்திரியாகும். இன்று இந்த வருடத்துக்கான சிவராத்திரி விழா நாடெங்கும் கொண்டாடப்படுகிறது/
சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளீட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ஹ்டுள்ளனர்.
அவ்வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில்,
”மகாசிவராத்திரி புனிதப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் அனைவரின் மீதும் பகவான் மகாதேவரின் ஆசீர்வாதம் நிலைத்திருக்க வேண்டும் என்றும், நமது நாடு முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.”
என்று பதிவிட்டுள்ளார்.