டில்லி

மேற்கு வங்கம், பீகார், உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நியமித்துள்ளார்.

முன்னாள் மக்களவை உறுப்பினரான ஜகதீப் தாங்கர் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆவார். இவர் கடந்த 1990-91 ஆம் ஆண்டு நாடாளுமன்ற  விவகாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் ஆவார். இவரை தற்போது மேற்கு வங்க ஆளுநராக ஜனாதிபதி ராம் நாத கோவிந்த நியமித்துள்ளார். அத்துடன் பீகாருக்குப் பாகு சவுகான ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராகக் கடந்த 2018 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேல் உத்திரப் பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில ஆளுநராக இருந்த லால்ஜி டாண்டன் மத்தியப் பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 27 ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடையும் திரிபுரா ஆளுநர் கப்பான சிங் குக்கி பதில் சத்தீஸ்கர் மாநில பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பைஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசுக்கும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் அமைப்புக்கும் இடையே சமரச ஒப்பந்தம் ஏற்பட உதவி புரிந்த என் ரவி நாகாலாந்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

[youtube-feed feed=1]