டில்லி

திருமண முன் ஒப்பந்தம் சட்டம் ஆக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரவை ஒரு கூட்டம் நடத்த உள்ளது.   இந்த அமைச்சரவை மேனகா காந்தியின் பொருப்பில் உள்ளது

திருமண முன் ஒப்பந்தம் என்பது வெளிநாடுகளில் மட்டுமே நடைமுறையில் உள்ள ஒரு ஒப்பந்தம் ஆகும்.   இந்த ஒப்பந்தத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள சொத்துக்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படும்.   திருமணத்துக்குப் பின் இருவரும் விவாகரத்து செய்து பிரியும் போது இந்த சொத்துக்களை எவ்வாறு பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பதையும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்

இந்தியாவில் இது போல ஒரு ஒப்பந்த நடைமுறை கிடையாது.   ஆனால் மேனகா காந்தியின் பொருப்பில் உள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் இந்த ஒப்பந்தத்தை சட்டம் ஆக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளது.  மேலும் இது குறித்து ஆராய சர்வதேச பெண்ணிய ஆர்வலர்கள் பங்கு பெறும் ஒரு கூட்டத்தை நிகழ்த்த திட்டமிட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துக் ஒள்ள இந்திய பெண்கள் ஆணயத்தின் காரியதரிசி நிஷ்தா சத்யம் மற்றும் மூத்த வழக்கறிஞர் கீதா லூத்ரா உட்பட பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.   கூட்டத்தின் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.