கோவை

மிழக அமைச்சரே டாஸ்மாக்கில் தரமில்லை என கூறுவதாக பிரேமலடா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று கோவையிள் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பிரேமலதா,

’தமிழகத்தில் 69 உயிர்களை கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தினால் இழந்துள்ளோம்.  இனி விஷ சாராயத்தால் தமிழகத்தில் ஒரு மரணம் கூட நிகழ கூடாது. புதிய சட்டம் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீதும், பாயுமா? கடந்த ஆண்டு விஷ சாராயத்தால் 22 பேர் உயிரிழந்தும் அரசு இப்போதுதான் விழித்துள்ளது.

ஆளும் கட்சியினர் துணையோட் கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. கிக் இல்லை என அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் மிக மோசமான கருத்தை பதிவு செய்வதும், மதுக்குடிப்பவர்கள் தானாக திருந்தினால்தான் பிரச்சினை தீரும் என ஒரு மூத்த அமைச்சரே சொல்வது கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் வரக்கூடாது என்பதற்காக அரசு டாஸ்மாக் நடத்தி வருவதால், ஒட்டுமொத்த மக்களும் குடிகாரர்களாக மாறியுள்ளனர். அமைச்சரே. டாஸ்மாக்கில் தரம் இல்லை என்பதை ஒப்புக்கொள்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடை திறக்கும் அரசால் ஏன் காவல் நிலையங்கள் திறக்க முடியாது? தமிழகம் எதை நோக்கி செல்கிறது? மக்கள் நல்ல ஆட்சி எது, நல்ல தலைவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உயிருக்கு விலை இல்லை,. பணம் மட்டுமே பிரதானம்.”

என்று தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]