யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) தலைவராக முன்னாள் மத்திய சுகாதார செயலாளர் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

யுபிஎஸ்சியின் தலைவராக இருந்த மனோஜ் சோனி ராஜினாமாவை அடுத்து அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரீத்தி சுதன் ஆகஸ்ட் 1ம் தேதி (வியாழக்கிழமை) பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1983-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான 65 வயதான ப்ரீத்தி சுதன், ஏப்ரல் 2025 வரை இந்த பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, யுபிஎஸ்சியின் தலைவராக இருந்த மனோஜ் சோனி, தனது 5 ஆண்டு பதவிக்காலம் முடிவதற்குள் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.

ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்வில் குளறுபடி நடைபெற்றதாக கடந்த சில வாரங்களாக புகார் எழுந்துள்ள நிலையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் பதிவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.