பாடனா
நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து [பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்
தற்போது பீகாரில் முதல்var நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மகாகத்பந்தன் கூட்டணியிலிருந்து வந்த அவரது தலைமையிலான அரசில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர ஆனார் . மத்தியில்  சூழலில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதீஷ் ஈடுபட்டு வந்த நிலையில், பீகார் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
நேற்று , பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்varaaka  பொறுப்பேற்றுக் கொண்டார். பீகாரின் முதல்varaala 9-வது முறையாக நிதிஷ் குமார் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிகழ்ச்சி நேற்று மாலை 5 மணியளவில் நடந்தது.
பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி பற்றித் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
[பிரசாந்த் கிஷோர்
“வரும் 2025 பீகார் சட்டசபைத் தேர்தல் வரை இந்த புதிய கூட்டணி நீடிக்காது. இந்த கூட்டணி அரசானது ஓராண்டு அல்லது அதற்கு குறைவான காலத்திற்கே டிக்கும் என்ற ரீதியில் கூறியுள்ளார். நிதிஷ் குமார், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முகம் ஆகவும் மற்றும் பா.ஜ.க.வின் ஆதரவுடன் உருவாகியுள்ள இந்த கூட்டணியானது, பீகார் சட்டசபை தேர்தல் வரை நீடிக்காது. இதனை உங்களுக்கு நான் எழுதி கூட தர முடியும் என்று கூறியுள்ளார். மக்களவை தேர்தலுக்குப் பின் 6 மாதங்களில் இந்த மாற்றம் நடக்கும். நான் கூறுவனவற்றைக் குறித்து வைத்து கொள்ளுங்கள்” 
என்று  கூறியுள்ளார்.